website loader
×

74.5 கோடி செலவில் இரயில்வே மேம்பாலம் - தமிழக அரசு ஒதுக்கீடு!!

திருமங்கலம் : திருமங்கலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரின் மையப்பகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் ஆறுமுக சாலையின் வழியில் ஒரு இரயில்வே கேட் உள்ளது. அதனைக் கடந்து தான் திருமங்கலத்தில் இருந்து ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடியும். மருத்துவமனை, கல்வி என எந்தவொரு காரியங்களுக்கும் திருமங்கலத்தை நம்பியுள்ள அந்த கிராமங்கள் இந்தக் இரயில்வே கதவைக் கடந்து தான் செல்ல முடியும். திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ஏறத்தாழ 30 விழுக்காட்டு மக்கள் இதனைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுரை - நெல்லை இரயில்வே வழித்தடத்தில் ஒரு நாளிற்கு ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட தடவை அடைக்கப்படுகின்றது.

திருமங்கலத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் இந்தாண்டு அமைக்கப்படுமா என கடந்த செப்.8ம் நாள் சட்டமன்றத்தில் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு, முத்துராமலிங்கம் கேள்வி எழுப்பினார். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, இரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்தது. மேம்பாலம் அமைக்க 74.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம்: ஜெ. ராஜகுரு.

Tamil nadu Government sanctioned Thirumangalam Railway bridge and alotted 74.5 crores for construction.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top