website loader
×

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

திருமங்கலம் : திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய நகர்புற நல்வாழ்வு இயக்கம் சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனையின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுனர்களைக் கொண்டு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் பொது மருத்துவம், கண் சிகிச்சை, காது மூக்குத் தொண்டை, ஸ்கேன், இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் திருமதி உமா விஜயன், அதிமுக நகர செயலாளர் திரு JD விஜயன், நகர் துணைச் செயலாளர் திரு இராஜாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி : ஜெய் முகேஷ்

Free Medical Camp was organised in Thirumangalam govt Hospital by National Urban Health Mission



தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top