website loader
×

திருமங்கலம் ஜவகர் 1வது தெரு உருவாக உதவிய பி.கே.என். பள்ளி

திருமங்கலம் : திருமங்கலம் நகரில் ஜவகர் 1வது தெரு உருவாக உதவிய பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

தற்போதைய திருமங்கலம் டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் யூனியன் கிளப் ஒரே வளாகத்தில் செயல்பட்டது. (அதாவது வெவ்வேறு கட்டிடம் - ஒரே வளாகம்) தற்போதைய பி.கே.என். ஆரம்பப் பள்ளி - பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடலாக இருந்தது. 1970களின் இறுதியில் திருமங்கலம் நகரின் மக்கள் தொகைப்படி நகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செயப்பட்டது. தற்போதைய பிகேஎன் மெட்ரிக் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பு செயல்பட்ட பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த சிறு ஊரணியை மூடி, புதிய பேருந்து நிலையம் அமைந்தது. ஏறத்தாழ அந்த இடம், அப்போதைய திருமங்கலம் நகரின் எல்லை என்று கூட சொல்லலாம். தற்போதைய செல்டன் பள்ளி இருக்கும் சாலையோ, கோர்ட் பிள்ளையார் கோயில் வரை தான் இருக்கும்.

திருமங்கலம் நகரின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியின் பெரும்பாலானோர் திருமங்கலம் அரசு மருத்துவமனை வழியாக கோர்ட் பிள்ளையார் கோயில் வந்தடைந்து பின்னர் பி.கே.என்.பள்ளியின் விளையாட்டுத் திடல் வழியாக பேருந்து நிலையம் வந்தனர். பி.கே.என் பள்ளி திடலில் அத்துமீறல்கள் அதிகம் இருந்தது. இதற்கு ஒரு முடிவு பிறக்க வேண்டும் என்று நினைத்து, திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் சார்பில், திருமங்கலம் டி.எஸ்.பி. அலுவலக வளாகம் - யூனியன் கிளப் வளாகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பி.கே.என். ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பிரிக்கப்பட்டதன் இடையில் புதிதாக அமைக்கப்பட்ட அந்த நெடிய சாலைக்கு ஜவகர் முதற்சாலை என பெயர் சூட்டப்பட்டது.

The history behind the creation of Jawahar nagar's 1st street located near Thirumangalam DSP Office.





தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top