website loader
×

திருமங்கலத்துக் குமரனின் (சி.வி. குமார்) திருக்குமரன் என்டர்டெயின்மன்ட்

திருமங்கலம் : தென்னிந்திய திரைப்பட வல்லுனர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த மதுரையின் துணைத் தூங்காநகராம் திருமங்கலத்துக் குமரன் திரு. சி.வி.குமார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏப்ரல் மாதம் 14ம் நாள், 1979ம் ஆண்டு பிறந்தார் சி. விஜயகுமார் (எ) சி.வி. குமார். இவர் தனது பள்ளிப் படிப்பை, மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டயமும், பெற்றார். மேலும் இயங்குபடம், ஒலி வடிவமைப்பு மற்றும் படத்திற்கு கதை எழுதுவது எப்படி என மதுரை அரினா அனிமேஷன் மூலம் பயின்றார். இவரது தந்தை, ஓர் சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததால், இந்தியாவின் எல்லா சுற்றுலா தளங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று வர வாய்ப்பு இவருக்கு நிறைய கிடைத்தது.

அவ்வாறு 2010ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் சென்ற போது அங்கிருக்கும் திரைப்படங்கள், தயாரிப்பு நிறுவன நுனுக்கங்களைக் கண்டு வியந்தார். இது போன்று தானும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் தரமான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தார், நாடு திரும்பியவுடன் அதற்கான ஆயத்த வேலைகளில் மும்முரமாக இறங்கினார். தனது நிறுவனத்திற்கு திருக்குமரன் என்டர்டெயின்மன்ட் என பெயர்சூட்டி தனது முதல் படமாக அட்டக்கத்தியை தேர்வு செய்து அதனை தயாரித்து முடித்தார். படம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் என முதல் தரப் படங்களாய் தேர்வு செய்து தயாரித்து அதில் வெற்றியும் கண்டார்.

தயாரிப்பாளராய் உருவெடுத்து எண்ணற்ற திறமையான கலைஞர்களை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்களுள் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாபி சிம்ஹா, அசோக் செல்வன் என உச்சம் பெற்றவர்களும் ஏராளம். இவரது எதிர்வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிபெற்று மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.

The daring producer CV Kumar of Thirukumaran Entertainment from the homeland of Tirumangalam, Madurai.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top