website loader
×

சேடபட்டி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளை சிறை பிடித்த கிராம மக்கள்

திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா சேடப்பட்டி அருகே அரசுப் பேருந்து சரியான நேரத்திற்கு வராததால் மக்கள் பேருந்தை சிறை பிடித்தனர்.

சேடபட்டி அருகே சென்னம்பட்டியிலிருந்து திருமங்கலத்திற்கு தினமும் காலை 7 மணிக்கு அரசுப் பேருந்து புறப்படும். இந்தப் பேருந்து ரெட்டியபட்டி, அழகு ரெட்டியபட்டி, செம்பரணி என 10 கிராமங்கள் வழியாக திருமங்கலத்திற்கு வந்து சேரும். இதனால் ஏறத்தாழ பத்து கிராம மக்கள், மாணவ, மாணவிகள் என பலருக்கும் வசதியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் பேருந்து, நேரம் தவறி வருவதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் அவதிக்குள்ளானார்கள். சரியான நேரத்திற்கு பேருந்து வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக திருமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவகத்திலும் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கொண்டு ரெட்டியபட்டி கிராம மக்கள் இன்று காலை, தங்கள் ஊருக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது மற்றொரு கிராமத்தில் இருந்து அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அதனையும் சிறை பிடித்த கிராமமக்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து சேடப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பயனாக சுமார் ½ மணிநேரம் நடைபெற்ற மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். அதன் பிறகு பஸ்கள் விடுவிக்கப்பட்டது.
செய்தி: மாலைமலர்

2 Government Buses were arrested by village people due to late arrival for the past few days.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top