website loader
×

திருமங்கலம் - சென்னை வழித்தடத்தில் புதிய பேருந்துகள்

திருமங்கலம் : திருமங்கலம் - சென்னை வழித்தடத்தில் இயங்கிய பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளது. நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருமங்கலத்திலிருந்து சென்னைக்கு நேரடி இருவழிப் பேருந்து தமிழக அரசால் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் திருமங்கலம் அரசு போக்குவரத்துப் பணிமனையின் கீழ் இப்பேருந்துகள் இயங்கி வந்தன. திருமங்கலத்துப் பணிமனை ஊழியர்களும் பேருந்தை நன்கு பராமரித்து வந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.நன்கு பராமரித்த பேருந்துகளுக்கு பதிலாக தேனி - சென்னை வழித்தடத்தில் இயங்கி அலுத்துப்போன பழைய பேருந்து விடப்பட்டது. இது குறித்து கடந்த சூலை மாதம் 29ம் நாள் நமது Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்பட்டது.(செய்திக்கு இங்கே அழுத்தவும்)

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12ம் நாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 422 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். அதில் திருமங்கலம் - சென்னை வழித்தடமும் அடங்கும். மேலும் திருமங்கலத்திலிருந்து மாலை 6:30 மணிக்கு சென்னைக்கு கிளம்பிய பேருந்து, இனி ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 7:30 மணிக்கு கிளம்பும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Old SETC buses are replaced with new buses in Thirumangalam - Chennai route.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top