website loader
×

துவரம்பருப்பு விளைச்சலில் சாதிக்கும் சிவரக்கோட்டை விவசாயிகள்

திருமங்கலம் : சிவரக்கோட்டையில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு பயிரிடப்பட்டு அமோக விளைச்சலை தந்துள்ளது.

சிவரக்கோட்டை, கரிசல்காளாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி மற்றும் செங்கப்படை கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தப் பகுதிகளில் கரிசல் மண் பரவிக் கிடக்கிறது. ஒரு மழை பெய்தால் போதும், ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்கும் ஆற்றல் கொண்டது இந்த கரிசல் பூமி. இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை இந்தப் பகுதியில் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முனைந்துள்ளது. இதை எதிர்த்து அந்த பகுதியினர் போராடி வரும் அதே நேரத்தில் சிவரக்கோட்டை பகுதியில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் இங்குள்ள உள்ள 400 ஏக்கரில் மட்டும் 100 குவிண்டாலுக்கும் அதிகமாக துவரம் பருப்பு விளைந்து, சிவரக்கோட்டை அரசு கூட்டுறவு வங்கியின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள விலை ஒரு கிலோவுக்கு ரூ.25லிருந்து ரூ.30 மட்டுமே. தற்போது சிவரக்கோட்டை பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்டுள்ள துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் இன்னும் அதிகம். உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தனியாருக்கு அவற்றை விற்று விடுகின்றனர். இதனால் துவரம் பருப்பு பதுக்கப்பட்டு இன்று கிலோ ரூ.210க்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

துவரம் பருப்பு பயிரிடப்பட்டு 6 மாதங்களில் விளைச்சலை எடுக்கலாம். அதே போல் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு வகைகளுக்கு 60 நாள்கள் போதும். இன்று இந்தியா முழுவதும் துவரம் பருப்பு விலை எகிறிக் கொண்டு செல்லும் நேரத்தில், விளைந்த பயிர்களுக்கு உரிய பணம் கிடைக்காமல் சிவரக்கோட்டை விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறுகையில், சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் அரசாணையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும். பருப்பு மற்றும் தானியப் பயிர்களின் சொர்க்க பூமியாக விளங்கும் சிவரக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையும் பயிர்களுக்கு உரிய விலை கிடைத்தால் சிவரக்கோட்டை பகுதி விவசாயிகள் தமிழகத்துக்கு பருப்பு மற்றும் தானிய வகைகளை தடையின்றி தர முடியும் என்று கூறினார்.
ஆபத்தின் விளிம்பில் சிவரக்கோட்டை
செய்தி : தினமணி

Thirumangalam taluk Sivarakottai village farmers are good in pulses production as compared to other districts of Tamil Nadu.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top