website loader
×

தண்ணீர் வந்தும் ஓடாமல் தேங்கும் நிலையில் திருமங்கலம் குண்டாறு

திருமங்கலம் : ஆக்கிரமிப்பு செடிகளால் தண்ணீர் வந்தும் ஓடாமல் தேங்கி பரிதாப நிலையில் திருமங்கலம் குண்டாறு

திருமங்கலம் நகரின் மேற்கிலிருந்து தெற்காக குண்டாறு ஓடுகிறது. மழைக் காலங்களில் மட்டும் ஓடும் இந்த ஆற்றைத் தூர்வார நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து கடந்த ஆண்டு இறுதியிலும் இவ்வாண்டு துவக்கத்திலும் பணிகள் நடந்து செடி கோடி ஆக்கிரமிப்புகளை அகற்றியது. கடந்த மார்ச் மாதம் திருமங்கலத்தைச் சுற்றியுள்ள கண்மாய்கள் நிறைந்து குண்டாற்றில் வெள்ளம் வந்த போதுகூட எங்கும் நில்லாமல் கடந்து சென்றது. ஆனால் இது முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில் குண்டாற்றில் மீண்டும் செடி கொடிகள் முளைத்துள்ளது. தற்போது கடந்த மூன்று நாட்களாய் பெய்த மழையின் காரணமாய் குண்டாற்றில் மீண்டும் முட்டி அளவிற்கு தண்ணீர் வந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் அகற்றிய செடி கொடிகள் மீண்டும் முளைத்து ஆளுயர வளர்ந்துள்ளதால் குண்டாற்றில் தண்ணீர் ஆங்கங்கே தேங்கியுள்ளது. பெருவெள்ளம் வருமுன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?

Rain Water lagged in Thirumangalam Gundar river due to unwanted plants

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top