website loader
×

மதுரை தெற்கு மாவட்டத்தில் பேனாவுக்கென்றே தனி கடை - இராமு பேனா கடை

திருமங்கலம் : மதுரை மாநகர் தவிர பேனாவுக்கென்றே தனி கடை நீண்ட காலமாக ஏறத்தாழ 48 ஆண்டுகளாக இன்றும் உயிர்ப்புடன் அதே பெயர்ப் பலகையோடு இருக்கும் நம்ம திருமங்கலம் இராமு பேனா கடை.
தனது 12வது வயதில் மதுரையிலுள்ள ஒரு பேனா தொழிற்சாலையில் பணிபுரிந்து, 1967ம் ஆண்டு திருமங்கலத்தில் சொந்தமாக பேனாக்களுக்கென்றே தனி கடையாய் ஆரம்பிக்கவேண்டும் என எண்ணி திருமங்கலம் உசிலைச் சாலையில் ராமு பேனா கடை என்ற ஒன்றை ஆரம்பித்தார். வண்டிச் சக்கரம் கொண்டு தானே மரக்கட்டை பேனாக்களை 1970களில் தயாரித்து விற்க ஆரம்பித்தார். மற்ற மரக்கட்டை பேனாக்களை விட இவரது ராமு கடை பேனா சற்றே தடிமனாய் இருக்கும். இதனால் மக்கள் குண்டு மரக்கட்டை பேனா என்றே அழைத்தனர். பின்னர் பம்பாய், தில்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பேனா உதிரிபாகங்களை வரவழைத்து தானே ஒன்றிணைத்து விற்பனை செய்தார். தற்போது வெளிநாட்டு மற்றும் வடநாட்டு பேனாக்களின் வரத்து அதிகமானதால் சற்று மந்தம் ஏற்பட்டுள்ளது.



Shri Ramu Pen store - A separate store for pen in Thirumangalam since 1967

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top