website loader
×

திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை

திருமங்கலம் : திருமங்கலத்தில் இரயில்வே மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை மற்றும் அதன் ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றது.

திருமங்கலம் இரயில் நிலையம் அருகே விமான நிலையச் சாலையில் உள்ள இரயில்வே கேட் நாள் ஒன்றிற்கு 48முறை அடைக்கப்படுகிறது. அடிக்கடி கேட் மூடப்படுவதால் திருமங்கலம் நகரின் விரிவாக்கப் பகுதிகளான கற்பக நகர், காமராஜபுரம், கலை நகர், மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே இப்பகுதியில் மேம்பாலம் ஒன்றை அமைக்க கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இதனை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம் அவர்கள் கடந்த செப்.8 அன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், மத்திய இரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலோடு விரைவில் பாலம் கட்டப்படும் என்று கூறினார். கடந்த அக்.1ம் நாள் மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, இதற்காக ரூ.74.5 கோடியினை தமிழக அரசு ஒதுக்கியது.

இதன் முதற்கட்டமாக திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட தேவர் சிலையிலிருந்து கற்பக நகர் வரையிலான ஆறுமுகம் சாலையினை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக பாலம் அமைக்க மண் பரிசோதனையை நடத்தி வருகின்றது நெடுஞ்சாலைத்துறை. மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுப் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
படம்: முகேஷ்

The construction works for Thirumangalam Railway over bridge has been kicked off.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top