website loader
×

திருமங்கலம் பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருமங்கலம் : திருமங்கலம் நகரில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளதையடுத்து அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

திருமங்கலத்தில் 13 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பைக் உள்ளிட்ட டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளில் அசுரவேகத்தில் பைக் ஓட்டும் சிறுவர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக புதுநகர் ரவுண்டானா, கற்பகம் நகர் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாத சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் டூவீலர்கள் ஓட்டியது தெரியவந்தது. போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில் வீட்டு வேலையாக செல்வதாகவும், ஒரு சிலர் வேலைக்கு சென்ற தங்களது பெற்றோரை அழைத்து வர நாள்தோறும் டூவீலரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் டூவீலர்களுடன் சிக்கினர். இதுதொடர்பாக அச்சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்த இன்ஸ்பெக்டர் அவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை எடுத்து கூறினார். மேலும் 18 வயதிற்கு உட்பட்டோர் லைெசன்ஸ் இல்லாமல் பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறி சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
செய்தி : தினகரன்

Thirumangalam Traffic police department warned parents who allow their child (under age 18) to ride bike

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top