website loader
×

கட்ராம்பட்டி அருள்மிகு முனியாண்டி சாமி கோயில் திருவிழா கோலாகலம்

திருமங்கலம் : கட்ராம்பட்டி அருள்மிகு முனியாண்டி சாமி கோயில் 44வது ஆண்டு பூஜை விழா இன்று கோலாகலமாக நடந்தது

திருமங்கலம் அருகேயுள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு முனியாண்டி சுவாமி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்கள் நாளன்று நடைபெறும் சிறப்புப் பூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபடுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு கட்ராம்பட்டி முனியாண்டி சுவாமி கருபண்ண சுவாமி திருக்கோயிலில் 44வது ஆண்டு பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விழா நாளன்று காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு பால்காவடி எடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அபிஷேக பொருட்கள் மற்றும் மலர்தட்டுகளுடன் கிராம நாட்டாமைக்காரர் வீட்டிலிருந்து அழைப்பு செய்து கோயிலுக்கு வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்தனர். அப்போது தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கலைகள் மற்றும் வீரவிளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து கோயிலை வந்தடைந்த மக்கள் சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர்.

விழாவிற்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் சிறப்புப் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளும் இரவு முழுவதும் கிராமிய கலை நிகழ்சிகளும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கட்ராம்பட்டி அருள்மிகு முனியாண்டி சுவாமி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம நாட்டாண்மைக்காரர் திரு. எஸ். பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புடன் ஏற்று நடத்தினர். விழா இனிதே முடிந்தது
நன்றி: திரு. தினபூமி இராஜா

Katrampatti Shri Muniyandi temple Thai month festival was celebrated today





தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top