website loader
×

கனரக வாகனங்களால் சேதமாகும் புதிய தார் சாலைகள்

திருமங்கலம் : உலகானியில் கனரக வாகனங்கள் அத்துமீறலால் சேதமாகும் புதிதாய் அமைக்கப்பட்ட தார் சாலை

மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையின் இடையே கொம்பாடி முதல் உலகாணி வரையிலான சாலை நீண்ட நாட்களுக்கு பின்பு தற்போது புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் உலகாணியில் இயங்கி வரும் ஏறத்தாழ எட்டு கிரஷர்கர்களில் இருந்து நாள் ஒன்றிற்கு 80 டன் முழு எடை கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் சாலை மிகவும் மோசாமான நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு கிராம மக்கள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு கனரக வாகங்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு பிறப்பித்தது. - உத்தரவு எண்;-(MP (MD)NO.1 OF 2015 in WP (MD) NO. 16354 OF 2015. Interim injunction granted on 14.9.15.)

ஆனால் உயர்நீதிமன்ற தடையையும் மீறி வழக்கம் போல் கனரக வாகனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதனால் சாலை பாதிப்படைவதுடன் இங்கு இயங்கி வரும் பேருந்திற்கும் இடையூறு ஏற்பட்டு, இந்த சாலையை பயன்படுத்தும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆகையால் அத்துமீறுபவர்கள் மீது உடனடியாக மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகம் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உலகாணி கிராமமக்கள் எதிர்பார்ப்பு.
படம் & தகவல் : திரு. ER அண்ணா முத்து.

Newly laid Kombadi - Ulagani road getting damaged due to heavy load vehicles passing through even after high court banned.




தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top