website loader
×

தி. கல்லுப்பட்டி பேருந்து விபத்தில் இறந்தவர்கள் பற்றின தகவல்

திருமங்கலம் : தி. கல்லுப்பட்டி பேருந்து விபத்தில் பலியானோர் மற்றும் படுகாயமுற்றோர் பற்றின தகவல்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சிமென்ட் மூடைகள் ஏற்றிச் சென்ற லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவயிடத்தில் இரண்டு டிரைவர்கள் உட்பட ௧4 பேர் பலியாகினர். 38 பேர் படுகாயமடைந்தனர்.கரூரிலிருந்து சிமென்ட் மூடைகளை ஏற்றிக் கொண்டு, 2 'டிரக்' லாரிகள் கேரள மாநிலம் ஆரியங்காவு சென்றன. டி.கல்லுப்பட்டி அருகே ஒரு லாரி முன் கூட்டியே சென்றது. பின்னால் சென்ற மற்றொரு லாரி எம்.சுப்புலாபுரம் கோபால் சுவாமி மலை விலக்கு அருகே மதியம் 4 மணிக்கு சென்று கொண்டிருந்தது. ராஜபாளையத்திலிருந்து குமுளி நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்தது. கோபால்சுவாமி மலை விலக்கு அருகே லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் முன் பக்கம் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் லாரியும், பஸ்சும் ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாக நின்றன. லாரியின் பெரும் பகுதி பஸ்சிற்குள் சிக்கியது. லாரி மற்றும் பஸ் டிரைவர்கள், பெண்கள் உட்பட ௧௩ பேர் சம்பவயிடத்தில் பலியாகினர்.

விபத்து நிகழ்ந்த இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. இதனால் விபத்து நடந்ததும் யாருடைய உதவியையும் நாட முடியவில்லை. அந்தவழியாக வாகனங்களில் சென்றோர் போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர். மேலும் முதலில் சென்ற சிமென்ட் லாரி டிரைவர், பின்னால் வந்த லாரியை கண்காணித்தபடி சென்றார். லாரி வராததால் அவர் சந்தேகமடைந்து, டி.கல்லுப்பட்டி நோக்கி லாரியை திருப்பிக் கொண்டு வந்தார். அப்போது தான் மற்றொரு லாரி விபத்திற்குள்ளானது தெரிந்தது. மாவட்ட எஸ்.பி., விஜயேந்திர பிதரி, டி.கல்லுப்பட்டி மற்றும் மதுரை, விருதுநகர் தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மணல் அள்ளும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பஸ், லாரிகளை பிரித்து, இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்களை மீட்டனர். பலியானவர் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர், விபரங்கள் முழுமையாக தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் ரோடு வளைவின்றி, நேராக உள்ளது. சமீபத்தில் தான் ரோட்டை விரிவுபடுத்தி இருக்கின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. சற்று துாரத்தில் வளைவு உள்ளது. சிமென்ட் லாரியில் அதிக பாரம் இருந்தது. அது மித வேகத்தில் சென்றது. எதிரே வந்த பஸ் முன்னால் சென்ற வாகனத்தை, முந்திச் செல்ல முயன்றதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அமைச்சர் செல்லுார் கே.ராஜூ, கலெக்டர் கே.வீரராகவராவ், மேயர், முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., போக்குவரத்துக் கழக மண்டல மேலாண்மை இயக்குனர் வீரபாண்டியன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கலெக்டர் கூறுகையில், 'ஐந்து பெண்கள் உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர்,' என்றார்.

பலியானோர்

1. முருகேசன், 49, அரசு பஸ் டிரைவர், வீரபாண்டி, தேனி.
2. முத்துக்குமார், 32, லாரி டிரைவர், கடையநல்லுார், திரு நெல்வேலி.
3. சுருளிராஜ், பெரியகுளம்
4. செல்வராஜ், வள்ளியூர், (திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இறப்பு).
5. கூடலிங்கம், 40, வலையப் பட்டி, கிருஷ்ணன் கோயில்.
6. பாலன்,65, உத்தமபாளையம்.
7. கோவிந்தராஜ், விருதுநகர்.
8 லட்சுமி, 48, சிவகாசி.
9. ஜெயலட்சுமி,42, ஸ்ரீவில்லிபுத்துார்
10. நல்லகுரு, 58, மம்சாபுரம்
11. ஜெய்சந்தோஷ், 9, மம்சாபுரம்

விபத்தில் காயமடைந்தோர் விபரம்

1. மாரீஸ்வரி, 20, ஆவாரம்பட்டி, ராஜபாளையம்.
2. நடராஜ், 54, ராஜபாளையம்.
3. வசந்தி, 35, போடி.
4. கருமலர்,50.
5. முருகேசன்,45.
6. வீரலெட்சுமி, அல்லிநகரம், தேனி மாவட்டம்.
7. சுரேந்தர்,15, அல்லிநகரம்.
8. ஹேமா,17, அல்லிநகர்.
9. பாண்டி,37, கருப்பாயூரணி, மதுரை.
10. ரம்யா, 12, பெரியகுளம்.
11. அழகுமீனாள், பெரியகுளம்.
12. தனலட்சுமி, ராஜபாளையம்.
13. செல்வராஜ்,58.
14. முத்துமாரி,48.
15. மகாலட்சுமி,22, தர்மபுரி.
16. வெங்கடேசன்,45.
17. ஏஞ்சலின்,20.
18. கலைச்செல்வி,40.
19. சாந்தி,40, பெரியகுளம்.
20. ரேகா, பெரியகுளம்.
21. யோகராஜன், தேனி.
22. மாணிக்கம், ஸ்ரீவில்லிப்புத்துார்.
23. முத்துலெட்சுமி,70, மம்சாபுரம்.
24. கோட்டையப்பன்,50, மம்சாபுரம்.
25. ரத்தினசாமி, கம்பம்.
26. சுப்பிரமணி,51.
27. ராஜாமணி, பெரியகுளம்.
28. தேவாகுருணன், உத்தமபாளையம்.
29. முனியசாமி, காங்கேயநத்தம், திருமங்கலம்.
30. முத்தைப்பாண்டி, கிருஷ்ணன்கோவில்.
31. முத்துக்காளீஸ்வரன்.
32. மணிசெல்வம், 27, கடையநல்லுார்.
33, ரத்தினசாமி, அரசு பஸ் கண்டக்டர்.
சிறுவர்கள்
34. அனிஸ்மா.
35. குமரேசன்.
36. காவியா.
37. ஜெய்சங்கர்.

விபத்து குறித்து விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் டிரைவர் காளி கூறியதாவது: விபத்துக்குள்ளான அரசு பஸ்சை ராஜபாளையத்தில் இருந்து பின் தொடர்ந்து வேனில் வந்தேன். அரசு பஸ் சீரான வேகத்தில் சென்றது. அழகாபுரியை அடுத்துள்ள எரிச்சநத்தம் சென்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் விபத்து நடந்ததாக கூறினர். உடனே அங்கு சென்றேன். மதியம் 3.15 மணிக்கு விபத்து நடந்தது. வெட்ட வெளி என்பதால் விபத்து நடந்தது யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்து வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிமென்ட் ஏற்றி வந்த லாரி வேகமாக செல்லவும், முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லவும் வாய்ப்பில்லை. முன்னால் சென்ற வாகனத்தை பஸ் முந்தி செல்ல முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் என்றார். இரண்டாவது பெரிய விபத்துமதுரை டி.கல்லுப்பட்டி அருகே தாதன்குளம் விவசாயி பாலமுருகன் கூறியதாவது: விபத்து நடந்த போது ஏற்பட்ட பயங்கர சப்தம், அலறல் சப்தம் கேட்டு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த சிலர், சம்பவ இடத்துக்கு முன் வந்தனர். லாரி, பஸ்சின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை மூட்டமாக இருந்தது. தாதன்குளத்தை சேர்ந்த சிலர் உதவிக்கு வருவதற்கு முன் ஏழு பேர் மீட்கப்பட்டிருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் உசிலம்பட்டி நக்கலக்கோட்டையில் சாலையோரம் இருந்த கிணற்றில் வேன் விழுந்ததில் 14 பேர் பலியாகினர். தற்போது இக்கோர விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர் என்றார்.

விபத்தில் இறந்த, 14 பேரின் குடும்பத்திற்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, உரிய சிகிச்சை அளிக்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
செய்தி: தினமலர்

The list of people died in an road accident of a govt bus collide with cement lorry near t.kallupatti yesterday

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top