website loader
×

கப்பலூர் ரிங்ரோடு மினி வேன் கவிழ்ந்து விபத்து - 17 பேர் படுகாயம்

திருமங்கலம் : திருமங்கலம் - மதுரை விமான நிலையச் சாலையில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து - 17 பேர் படுகாயம்

திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட்டியை சேர்ந்த சுப்பையா (72), சோலையம்மாள் (50), மல்லிகா (30), சாந்தா (45), லட்சுமி (48), மாசம்மாள் (35), பேச்சியம்மாள் (45) உள்ளிட்ட 17 பேர் விடத்தகுளம் கிராமத்திற்கு உறவினர் வீட்டு விழாவிற்கு மினிவேனில் நேற்று காலை வந்தனர். வேனை தொட்டியபட்டியை சேர்ந்த டிரைவர் விஜயன் (30) ஒட்டி வந்தார்.

திருமங்கலம்-மதுரை விமான நிலைய ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே வேன் வந்த போது நிலைதடுமாறி எதிர்பாராவிதமாக கவிழ்ந்தது. இதில், வேனில் வந்த சோலையம்மாள், சுப்பையா உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். இதில் சோலையம்மாள் ஆபத்தான நிலையில் இருந்ததால் மதுரை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மற்றவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி : தினகரன்

17 were injured in an accident in Thirumangalam - Madurai Ring road yesterday

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top