website loader
×

காலங்கள் கடந்து நிமிர்ந்து நிற்கும் நம்ம ஊர் (மின்) விளக்குத் தூண்

திருமங்கலம் : 80 ஆண்டுகளாக குண்டாற்றின் வரலாறு காணா வெள்ளம் & வறட்சி கண்ட நம்ம ஊர் விளக்குத் தூண்

திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்தும், குமரன் கோயில் வழியாகவும் காட்டு பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் குண்டாற்றின் நடுவில் இருக்கும் இந்த மின் விளக்கு பீடத்தை எவரும் காணாமல் கடக்க முடியாது. அதனைப் பற்றி இனி காண்போம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை திருமங்கலம் குண்டாற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்ல தற்போதுள்ள பி.கே.என் பெண்கள் பள்ளி வழியாகத் தான் பலரும் சென்று வந்தனர். காலை வெளிச்சம் மாலையில் மறையும் போது இவ்வழியாக யாரும் கடக்க மாட்டார்கள். மேலும் குண்டாற்றில் தண்ணீர் செல்லும் போது ஆற்றை கடக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது.. அதனால் மழை வெள்ளத்தில் மிதந்து அனல் வெயிலில் வறண்ட குண்டாற்றின் நடுவே இந்த விளக்கு பீடமானது திருமங்கலம் கே.டி.ஓ.டி. குடும்பத்தினரால் 1936ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் நாள் (25 மே, 1936) நிறுவப்பட்டது. இப்பீடம் நிறுவப்பட்ட பிறகு குண்டாற்றைக் கடக்க சற்று மேடு அமைத்து பாதை அமைக்கப்பட்டது. இரவில் ஒளிர்ந்தும், ஆற்றில் தண்ணீர் செல்லும் போது வழி தவராமலிருக்கவும் பெரும் உதவியாய் இருந்தது. நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பெரு வெள்ளங்களுக்கு இடையே இப்பீடம் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது நம்ம ஊர் மின்சார விளக்குத் தூண்!!
குறிப்பு: இப்பீடத்தினைப் பற்றி மேலும் தகவல்கள் & அறிய புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்!! (mail us to admin@tirumangalam.com)

Light post stood more over for 80 years at the mid of Thirumangalam Gundar river.

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top