website loader
×

சிலம்பம் சுற்றுவதில் சவால் விடும் திருமங்கலத்து சாதனை மாணவி

திருமங்கலம் : அயராது சிலம்பம் சுற்றுவதில் சவால் விடும் திருமங்கலத்தின் பெருமைமிகு சாதனை மாணவி

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு, தற்காப்பு என அனைத்திலும் சாதனை படைக்கின்றனர். அவ்வாறு ஆண்களுக்கு நிகராக சிலம்பாட்டத்தில் கம்பு சுற்ற முடியும் என சவால் விடுகிறார் நம் திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி கீதா. கீதாவுக்கு சிறு வயது முதலே தற்காப்புக் கலையில் ஆர்வம் அதிகம். இதனால் பெற்றோர் கராத்தே வகுப்பில் சேர்த்தனர்.

கராத்தே மட்டுமல்லாது, தமிழரின் சிலம்பத்தின் மீதும் ஆர்வம் ஏற்படவே தனது ஆறாம் வகுப்பு முதல் சிலம்பம் கற்க ஆரம்பித்தார். கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான போட்டி, உசிலம்பட்டியில் நடந்த மதுரை மண்டல போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்திய சிலம்ப பயிற்சி மையம் மதுரையில் நடத்திய போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து மாவட்டத்திற்க்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவி கூறியபோது, என் விருப்பத்தை தெரிவித்த போது பெற்றோர் மறுப்பேதும் கூறாமல் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். சிலம்பத்தில் தனித்திறன் மற்றும் குழுச்சண்டை ஆகியவற்றில் பரிசுகளை வென்றுள்ளேன். இக்காலப் பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம். எனது மாஸ்டர் போஜராஜன் மற்றும் இராஜா ஆகியோர் பல்வேறு விதங்களில் பயிற்சிகளை அளித்துள்ளனர். குருவின் பெயரை காப்பாற்ற பல்வேறு சாதனைகளை படைப்பேன். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே எனது ஆசை" என்றார். குருவின் நம்பிக்கையை காப்பாற்றவும் அவரது ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நன்றி: தினகரன்

Thirumangalam PKN Girls school student Geetha excel National level in Silambam

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top