website loader
×

கிழவனேரியில் நோய் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

திருமங்கலம் : திருமங்கலம் அருகேவுள்ள கிழவனேரியில் நோய் தாக்கி 100 ஆடுகள் இறந்ததால் கால்நடைகளை வளர்ப்போர் கவலையில் உள்ளனர்.

இங்கு விவசாயிகள் செம்மறி, வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகள் வளர்ப்பு மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இரு வாரங்களாக ஆடுகளுக்கு வாயில் புண்கள் ஏற்பட்டன. இதனால் இரை எடுக்காமல் வாடி இறந்தும் போயின. இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இங்கு மட்டும் இரு வாரங்களில் 100 ஆடுகள் பலியானதாக கிராமத்தினர் தெரிவித்தனர். ஆடுகளை வளர்க்கும் அழகுபாண்டி கூறியதாவது: என் 60 ஆடுகளில் 4 ஆடுகள் நோய் தாக்கி இறந்தன. மாரிமுத்து, வேலுச்சாமி போன்றவர்களின் ஆடுகளும் இறந்து விட்டன. என்ன நோய் என தெரியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு பின் ஆடுகள் ஓரிரு நாள்களில் வாயில் புண் வந்து உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்து வருகின்றன. காலாவதியான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. இது குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

கால்நடை டாக்டர் அழகுமுருகன் கூறியதாவது: ஆடுகளுக்கு வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. ஆடு வளர்ப்பாளர்கள், ஆடுகளுக்கு தாங்களாகவே ஊசி போட்டுள்ளனர். நாட்டு வைத்தியம் செய்துள்ளனர். தகவல் கொடுத்திருந்தால் ஆடுகள் இறப்பை தவிர்த்திருக்கலாம், என்றார்.

Hundreds of goats died for the past 2 weeks in a disease near Kizavaneri.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top