website loader
×

எம்.ஆர். ராதாவை வற்புறுத்தி நாடகம் போட வைத்த திருமங்கலம்

திருமங்கலம்: மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனும் எம்.ஆர் ராதா, 1907ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் நாள் பிறந்தார். சிறு வயதிலே பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான்' என்பார்! இவர் நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937), கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979),

நாடகம்
சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்! இவரது ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன! அவ்வாறு 1960களின் மத்தியில் ஒருமுறை விருதுநகர் அருகே நாடகம் போட தனது காரில் சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தை தாண்டிய போது, அவ்வழியில் இருந்த மக்கள், அது எம்.ஆர். ராதாவின் கார் என கண்டுகொண்டு காரை மறித்தனர். ராதா எப்போதும் தனது காரில் துப்பாக்கி வைத்திருப்பார். முதலில் துப்பாக்கியை தூக்கியவர், மக்கள் தன்னை தாக்க வரவில்லை என உணர்ந்து, அதை தன காரிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கினார். எம்.ஆர். ராதாவை கண்டதும் அங்கு குழுமியிருந்த மக்கள், தங்களுக்காக ரத்தக் கண்ணீர் நாடகம் போடும்படி கேட்டனர். நீண்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு, தமக்கு தற்போது வேறு வேலை இருப்பதாகவும், திரும்பும் போது நாடகம் கண்டிப்பாக போடுகிறேன் என வாக்களித்தார். மக்களும் அவருக்கு வழிவிட்டு அனுப்பி வைத்தனர். அன்று நாடகம் முடித்து மறுநாள், சொன்னபடி அவரும் வந்தார். ரத்தக் கண்ணீர் நாடகமும் திருமங்கலத்தில் அரங்கேற்றமாயிற்று.

Tirumangalam People urge M.R.Radha to perform Ratha kanneer Drama on the spot.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top