website loader
×

கப்பலூர் சுற்றுச்சாலையை 4 வழித்தடமாக்க முதல்வர் அடிக்கல் நாட்டினார்

திருமங்கலம் : மாட்டுத்தாவணி - கப்பலூர் இடையிலான சுற்றுச்சாலையை நான்கு வழித்தடமாக்க்கிட தமிழக முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2001ம் ஆண்டு கப்பலூரிலிருந்து மாட்டுத்தாவணி வழியாக சமயநல்லூர் வரை சுற்றுச்சாலை அமைக்க திட்டவரைவு உருவாக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக கப்பலூர் - மாட்டுத்தாவணி சுற்றுச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு அன்றைய முதலமைச்சர் திரு. கருணாநிதியால் துவக்கப்பட்டது. பின்பு அதன் நீட்சியாக செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டிய மாட்டுத்தாவணி - சமயநல்லூர் திட்டம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

ஏறத்தாழ 16 ஆண்டுகள் முடிந்து மதுரையின் எல்லா சாலைகளும் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 29கிமீ கொண்ட இச்சாலை மட்டுமே அப்படியே இருக்கின்றது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் ஒரு பயணி குமரி முதல் திருமங்கலம் வரை மற்றும் பாண்டி கோயில் முதல் சென்னை வரை 4 வழிச்சாலையிலும் இடைப்பட்ட இந்த 29கிமீ 2 வழிப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேர விரையமும் விபத்து அபாயங்களும் ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. இதனை 4 வழிச்சாலையாக்கிட அனைத்துத் தரப்புப் பொதுமக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ரூ.213.69 கோடி மதிப்பீட்டில் கப்பலூர் - மாட்டுத்தாவணி சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக்கிட தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று கானொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Tamil Nadu Chief minister Jayalalitha laid foundation for the conversion of Kappalur Ring road to 4 way track

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top