website loader
×

கண்டுகுளம் குண்டாற்றில் அத்துமீறி நடக்கும் மணல் கொள்ளை

திருமங்கலம் : திருமங்கலம் அருகே கண்டுகுளம் குண்டாற்றில் தொடரும் மணல் கொள்ளையை அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை.

ஆண்டிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி மலைகளில் இருந்தும், கண்மாய்களில் இருந்தும் சிறு ஓடைகள் வழியாக குண்டாற்றிற்கு தண்ணீர் வரும். சாத்தங்குடி, கண்டுகுளம், காரியாபட்டி, கமுதி வழியாக இந்த ஆறு செல்கிறது. குண்டாற்றை நம்பி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் உள்ளனர். பத்தாண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு குண்டாற்றில் வெள்ளம் ஓடியது. இதனால், திருமங்கலம் பகுதியில் ஆற்றில் மணல் படிந்தது. இதை அனுமதி இன்றி சமூக விரோதிகள் கொள்ளையடித்து வருகின்றனர். இரவு நேரங்களில், லாரிகளில் மணல் அள்ளி வருகின்றனர். பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினர் கண்டும் காணாமலும் உள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன், விவசாயத்திற்கும் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். கலெக்டர் தலையீட்டு மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.
செய்தி : தினமலர்

River Sand has been taken illegally in Gundar River near Kandukulam

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top