website loader
×

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 139 பதட்டமான வாக்குச்சாவடிகள்

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 139 பதட்டமான வாக்குச்சாவடிகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ம் நாள் நடைபெறவிள்ளது. இதனையொட்டி தொகுதிகளில் பதட்டமானவை எத்தனை என்பதனை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் தனித்தனியாக கணக்கெடுத்து வருகின்றனர். இதில் திருமங்கலம் தொகுதியில் மட்டும் 139 தொகுதிகள் பதட்டம் நிறைந்தவை என வருவாய்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.

திருமங்கலம் தொகுதியில் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 153 ஆகும். திருமங்கலம் தொகுதி - திருமங்கலம் வட்டம் மற்றும் பேரையூர் வட்டம் பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதில் மொத்த வாக்குச்சாவடிகள் 304. இதில் தற்போது 139 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக வருவாய்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
தகவல்: தினகரன்

Tamil nadu Revenue department calculated 139 polling booths as tensed in Thirumangalam constituency

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top