website loader
×

அரசு மருத்துவமனையில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பெண் சிசு

திருமங்கலம் : திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனையில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பெண் சிசுவினால் பரபரப்பு.

திருமங்கலம் முன்சீப் கோர்ட்டு ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆஸ்பத்திரியில் ஆண்கள்-பெண்கள் வார்டுகளுக்கு இடையே உள்ள வராண்டாவில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பெயர் கொண்ட பையில் குழந்தை இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் ஆஸ்பத்திரி நர்சு ரேவதிக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர் பையில் இருந்த குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள சிசு பராமரிப்பு பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர் ஆனந்த்துரை திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: மாலைமலர்

Female infant found uncared in Thirumangalam Govt Hospital yesterday

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top