website loader
×

தரமற்ற குண்டாறு தரைப் பாலம் - வேங்கடசமுத்திர கிராம மக்கள் முற்றுகை

திருமங்கலம் : குண்டாற்றின் குறுக்கே தரமற்ற தரைப் பால கட்டுமானம் - வேங்கடசமுத்திர கிராம மக்கள் முற்றுகை

திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் நான்குவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளது வேங்கடசமுத்திரம் பகுதி. நகராட்சி பகுதிக்குள் வரும் இந்த பகுதிக்கு குண்டாற்றினை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் உசிலம்பட்டி ரோட்டிலிருந்து தங்கள் பகுதிக்கு குண்டாற்றின் மீது பாலம் அமைக்க வேண்டுெமன பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.3 கோடி செலவில் குண்டாறை தூர்வாரும் பணியுடன் சேர்த்து இந்த பகுதியில் பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

பாலத்தின் அடியில் தண்ணீர் கடந்து செல்ல வசதியாக ராட்ச குழாய்கள் உள்ளிட்டவை இறக்கி வைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் பாலத்தின் அஸ்திவாரப் பணிகள் துவங்கின. அப்போது தரமற்ற விகிதத்தில் சிமிண்ட் கலக்கப் படவில்லையென்று வேங்கசமுத்திர பகுதி மக்கள் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருமங்கலம் தாசில்தார் ராஜேந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர். தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அப்போது வாடிப்பட்டியில் மணல் கொண்டுவந்து அதில் தான் பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும், உவர்மணலை கொண்டு பாலத்தின் இருபுறக்கரையினை மேம்படுத்த முடிவு செய்து மணலை ஒதுக்கியதாகவும் ஒப்பந்தகாரர் தரப்பில் கூறப்பட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி தரமான மணலை கொண்டு பாலம் அமைக்கும் பணியை நடத்தவேண்டும் என அறிவுறுத்தி பாலம் அமைக்கும் பணியை நிறுத்தினார். குண்டாறு பாலத்திற்கு வாடிப்பட்டியிலிருந்து மணல் கொண்டு வரப்பட உள்ளது. இதுதொடர்பாக வாடிபட்டி தாசில்தாரிடம் பேசியுள்ளேன். மேலும் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் பேசியதில் வாடிப்பட்டி பகுதியிலிருந்து எடுத்து வரப்படும். தரமான மணல் கொண்டுதான் பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.
செய்தி: மாலைமலர் & தினகரன்

Venkatasamuthiram people protest on road to maintain the quality of the Gundar bridge

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top