website loader
×

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு

திருமங்கலம் : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016 திருமங்கலம் தொகுதிக்கான பாஜக வேட்பாளரினை அக்கட்சி அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பா.ஜ வேட்பாளராக திரு.வி.ஆர்.ராமமூர்த்தி (வயது59) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை பற்றிய விவரம் வருமாறு:–

திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரத்தை சேர்ந்தவரான இவர் 10–ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது திருப்பூரில் வசித்து வரும் இவர் உணவகம் தொழில் செய்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் கடந்த 1990–ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கட்சியில் திருப்பூர் மாவட்ட விருந்தோம்பல் அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி செல்வராணி, மூத்த மகள் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். 2–வது மகள் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் நன்கு அறிமுகமானவர் என்பதால் இத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BJP announced Candidates for Thirumangalam constituency as of Tamil Nadu Assembly election

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top