website loader
×

ஆலம்பட்டி பாய்ஸ் டவுன் நிறுவனர் திரு. ஜோ ஹோமன் காலமானார்

திருமங்கலம் : திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி பாய்ஸ் டவுன் நிறுவனர் திரு. ஜோ ஹோமன் நேற்றிரவு இயற்கை எய்தினார்

ஆங்கிலேயரான ஜோ ஹோமன், ஒரு முறை மதுரை இரயில் நிலையத்திற்கு வந்த போது, அங்கே நடைபாதையில் தங்கியிருந்த ஏழைச் சிறுவர்களின் நிலை கண்டு மனம் வருந்தி அவர்களுக்காக ஆதரவு இல்லம் துவக்கும் எண்ணத்தோடு 1965ல் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் பாய்ஸ் டவுன் என்ற அமைப்பை துவக்கினார். முதலில் பண்ணை நிலங்களை உருவாக்கி ஏழைச் சிறுவர்களின் முன்னேற்றத்திற்கு உதவினார். பின்னர் அதையே கல்விக் கூடமாக மாற்றினார்.

இன்று பாய்ஸ் டவுன் 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் திருமங்கலம் சுற்றுவட்டார மக்களின் நன்மதிப்பை பெரிதும் பெற்று, எறத்தாழ 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. அங்கே பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு அளித்து பயின்று வெளிவரும் மாணவர்களுக்கு தகுந்த வழிநடத்தியும் செல்கிறது பாய்ஸ் டவுன். இந்நிலையில் பாயிஸ் டவுன் நிறுவனர் தலைவர் திரு.ஜோ ஹோமன் கடும் நெஞ்சுவலியால் நேற்றிரவு இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
தகவல்: அழகுசுந்தரம்

Alampatti Boys Town founder Mr.Joe Homan died after a severe heart arrest yesterday night.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top