website loader
×

இரஷ்யாவில் நடக்கவுள்ள கால்பந்து போட்டிக்கு கள்ளிக்குடி மாணவி தேர்வு

திருமங்கலம் : இரஷ்யாவில் நடக்கவுள்ள தேசிய கால்பந்து போட்டி இந்திய அணியில் கள்ளிக்குடி மாணவி தேர்வு

கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி, இந்திய அணியில் தேர்வு பெற்று ரஷ்யாவில் நடக்கவுள்ள உலக மகளிர் கால்பந்து போட்டியில் விளையாட உள்ளார். இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்று வந்தனர். இந்நிலையில், திருச்சியில் நடந்த மாநில கால்பந்து போட்டியில் 11ம் வகுப்பு மாணவிகளில் தேர்வான ஆர்.மேனகா, எம்.ரைஹானா பேகம், பி.சங்கீதா ஆகியோர் ஒடிசா கட்டாக்கில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்றனர். இதில் அடுத்த மாதம் ரஷ்யாவில் நடக்க உள்ள உலக கால்பந்து போட்டிக்கு மேனகா இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். 16 வயதிற்குட்பட்ட போட்டி பிரிவில் பங்கேற்கிறார். மேனகா கூறியதாவது: 7ம் வகுப்பு முதல் பயிற்சி பெற்று வருகிறேன். சகமாணவிகள் கால்பந்து விளையாட்டில் தீவிரமாக உள்ளோம். எங்களுக்கு மைதான வசதியில்லை. கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களின்றி முறையான பயிற்சி பெறமுடியாமல் உள்ளோம். அடுத்தமாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ள போட்டிக்கு, என் ஆசிரியரின் சொந்த செலவில் பயிற்சி பெற்று வருகிறேன்.

உடற்பயிற்சி ஆசிரியர் சரவணக்குமார்: 5 ஆண்டுகள் கடும் உழைப்பிற்கு பின் கிடைத்த வெற்றி இது. இதற்கு திருமங்கலம் நண்பர்கள் கால்பந்து குழு, மதுரை கால்பந்து சம்மேளனம், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தமிழ்நாடு கால்பந்து சம்மேளனம் உறுதுணையாக இருந்தனர். மேலும் கள்ளிக்குடி பகுதியில் உள்ள மாணவிகள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர், என்றார்.
செய்தி: தினமலர்
படம்: அம்புஜா

kalligudi govt school girl selected in indian national football team to be participate in Russia tournament

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top