website loader
×

கரையான்களால் கரைந்து சுவர் பெயர்ந்த நிலையில் வடக்கம்பட்டி கிளை நூலகம்

திருமங்கலம் : கரையான்களால் புத்தகங்கள் கரைந்து சுவர் பெயர்ந்த நிலையில் வடக்கம்பட்டி கிளை நூலகம்

இந்நூலகம் 1997ல் திறக்கப்பட்டது. தினமும் 30 பேர் வருகின்றனர். மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களும் இந்நுாலகத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு விளக்கு வசதி, இருக்கைகள் இல்லை. மின்ஒயர்கள் அறுந்து தொங்குகிறது. மின்கசிவு ஏற்பட்டால், அனைத்து புத்தகங்களும் கருகும் நிலை உள்ளது. மேலும் புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கரையான்கள் அரித்து குப்பைகளாக குவிகின்றன. நுாலகத்துறை வழங்கிய 5 ஆயிரம் புத்தகங்கள் மூடைகளில் முடங்கி கிடக்கின்றன. கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. நூலகர் அல்லி கூறுகையில், 'நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்க ரேக்குகள் இல்லை. பீரோ உடைந்துவிட்டது. அதனால் தான் புத்தகங்கள் சிதறியுள்ளன. நூலக உதவியாளர் இருந்தால், புத்தகங்களை பராமரிக்க உதவியாக இருக்கும்' என்றார்.
நன்றி: தினமலர்

Vadakkampatti Branch Library is in dangerous condition due to poor maintenance.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top