website loader
×

சங்ககால புலவர் நக்கீரர் பிறந்த பெருமைக்குரிய ஊர் எது என்று தெரியுமா?

திருமங்கலம் : நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுரைத்த புலவர் நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு?

தமிழகத்தில் இதிகாசங்கள், புராணங்கள், மன்னர்கால வரலாறுகள் என பல உள்ளன. சங்ககாலம் என்பது மதுரைக்கு பொருந்தும். பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகம் உடையது பாண்டிய மன்னர்கள் வரலாறு. அதில் சிவனின் திருவிளையாடல் ஒன்று.

அப்போது தான் தமிழ் வளர்த்த புலவர் கள் ஏராளமாக இருந்துள்ளனர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கை மணமா அல்லது செயற்கை மணமா என்ற பாண்டிய மன்னரின் சந்தேகத்தை தீர்க்க சிவனே புலவர் வடிவில் வந்து வாதம் புரிந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அந்த வாதத்திற்குரியவர் தான் நக்கீரர் என்ற தமிழ்ப் புலவர். முருகன் மீது பக்தி கொண்டு திருமுருகாற்றுப்படை இயற்றியவர். அந்த சங்க கால புலவர் பிறந்த இடமாக கூறப்படுவது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் இருந்து சேடபட்டி செல்லும் வழியில் உள்ள திரளி கிராமமாகும்.

பழமையின் அடையாளங்கள்
இந்த கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் உள்ள இடத்தின்அருகே இருந்தது. காலப்போக்கில் அழிந்துபோய் அதன் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. ஊர் இருந்ததற்கான அடையாளமாக மிகப்பெரிய மண்மேடு இருந்துள்ளது. தற்போது மேடு சிறிய அளவில் உள்ளது. அதைசுற்றி நிலமாக்கி விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தை உழும்போது இப்போதும் பூமிக்கடியின் இருந்து மண்பானைகள், கட்டிட கற்கள், கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. மிகச்சிறிய அம்மியும் நிலத்தில் இருந்து எடுத்துள்ளனர். கண்மாய்க்குள் சிறிய செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு ஒன்று புதர் மண்டி கிடக்கிறது. கண்மாய்கரை ஓரம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய முள்புதர் உள்ளது. அங்கு சென்று பார்த்தால், உடைந்த பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன.

இதுகுறித்து பெரிய மண்மேட்டின் ஓரம் நிலத்தில் விவசாயம் செய்து வரும் வேல்மயில் என்பவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை உழுதபோது உடைந்த மண்பானைகள், கட்டிட கல் மற்றும் சிறிய அம்மி கிடைத்தது’ என்றார். திரளி கிராமத்தை சேர்ந்த கிராமசபை நிர்வாகி பிச்சை என்பவர் கூறும்போது, திரளி ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தது. இங்கு நக்கீரனார் பிறந்ததாக கூறுகின்றனர். அவர் வாழ்ந்ததாக கூறப்படும் இடம் மேடாக உள்ளது. அதில் தோண்டும் போது, ஏற்கனவே ஊர் இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. திரளி மற்றும் அச்சம்பட்டி அருகே இப்போது தோண்டினாலும் மிகப்பெரிய பானைகள், முதுமக்கள் தாழி ஆகியவை கிடைக்கும்’ என்றார். இறைவனுடன் வாதம் புரிந்தாகவும் தமிழுக்கு தொண்டாற்றியவருமான பழம்பெரும் புலவர் நக்கீரர் பிறந்து வாழ்ந்த ஊர் வெள்ளம் வந்ததால் அழிந்ததா அல்லது வேறுகாரணமா என்று தெரியவில்லை. தற்போது கிராமம் இருந்ததற்கான இடம் முழுவதும் விவசாய நிலமாகி போனது.
நன்றி: தினத்தந்தி

Sangam Literature poet Nakkeerar's birthplace found near Thirali village of Tirumangalam village.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top