website loader
×

விபத்தில் தென்மண்டல கால்பந்து அணி முன்னாள் வீரர் மரணம்

திருமங்கலம்: தென்மண்டல கால்பந்து அணியின் முன்னாள் வீரரான திருமங்கலம் உத்தண்டன் தெருவை சேர்ந்த ஜான் நியூட்டன் (வயது 42) நேற்றிரவு (12 சூலை 2015) நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் திருமங்கலம் டவுன் போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

அண்மையில் திருமங்கலத்தை அடுத்துள்ள கரிசல்பட்டியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து ஜான் நியூட்டனுக்கு அங்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

நேற்று இரவு பணி முடித்துவிட்டு கரிசல்பட்டியில் இருந்து வீட்டுக்கு ஜான் நியூட்டன் (ஹெல்மெட் அணிந்து) மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். திருமங்கலம் தெற்குதெரு பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரோட்டை கடந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் அந்த வாலிபர் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போலீஸ்காரர் ஜான்நியூட்டனை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ஜான் நியூட்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த திரு ஜான் நியூட்டனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரின் குடும்பத்திற்கு எங்களது இரங்கல்கள்
செய்தி & படம்: மாலைமலர்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top