website loader
×

தோப்பூர் சேட்டிலைட் சிட்டி பணிகள் மும்முரம்! திட்டம் விரைவுபடுத்த உத்தரவு

திருமங்கலம் : தோப்பூர் சேட்டிலைட் சிட்டி பணிகள் மும்முரம்! திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு உத்தரவு

தோப்பூரில் சேட்டிலைட் சிட்டி திட்டத்தை விரைவுபடுத்தி, அதை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தோப்பூரில் சேட்டிலைட் சிட்டி அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 586.86 ஏக்கரில் 19,500 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்திற்காக வீட்டு வசதி வாரியத்தில் தனி பிரிவு துவக்கப்பட்டு நில ஆர்ஜிதப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தது. இதற்காக ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதை ' ஹைடெக்' சிட்டியாக உருவாக்கும் வகையில் பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கும் நிலையில் உள்ளன. கப்பலுார் நான்கு வழிச்சாலையில் இருந்து நேரடியாக தனி ரோடும் அமைக்கப்பட உள்ளது. சட்டசபையில் 110வது விதியில் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் செயல்பாட்டிற்கு வராத திட்டமாக, தேர்தலின் போது எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. நேற்று வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குனர் கிரண்குராலா, தலைமை பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் சண்முகம், மகேந்திரவர்மா ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில்,"இங்கு ரோடு, குடிநீர், பாதாள சாக்கடை என அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பணிகளை விரைந்து முடிக்கவும், பிளாட்டுகளை பிரித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்படுத்தி பணிகளை துரிதப்படுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன'', என்றனர்.
நன்றி: தினமலர்

Thoppur Satellite city construction works are in full swing after the order from Tamil Nadu Government.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top