website loader
×

ஓட்டை உடசல் & பரிதாப நிலையில் திருமங்கலம் 108 ஆம்புலன்ஸ் வாகனம்

திருமங்கலம் : திருமங்கலம் பகுதிக்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் எப்.சிக்கு சென்று ஒரு மாத காலமாகியும் திரும்பி வராததால் பழுதான மாற்று 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பழுதான மாற்று ஆம்புலல்ஸில் வண்டி ஓடிக் கொண்டிருக்கும்போதே பின் கதவுகள் தானாக திறந்து கொள்கின்றன. பிரேக் சரிவர செயல்படவில்லை. இதனால் இதில் பயணிக்கும் நோயாளிகள் மட்டுமின்றி உடன் செல்வோரும் உயிரை கையில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற கொளாறுகள் காரணமாக ஆம்புலன்ஸ் ஆமை வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியா நிலை நிலவிகிறது. மேலும் விபத்துகளில் சிக்கியவர்கள், பிரசவ வேதனையில் உள்ள பெண்களை ஏற்றக் கூடிய ஸ்ட்ரெச்சரின் அடிப்பாக சக்கரங்கள் ஒடிந்து இயக்க முடியா நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகளை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்குள் ஊழியர்கள் திணறி வருகின்றனர். மேலும் ஆக்சிசன் சிலிண்டரின் குமிழும் உடைந்துள்ளது.

இவ்வாறு ஓட்டை உடசலான ஆம்புலன்ஸை உடனே மாற்றி எப்.சிக்கு சென்ற & நல்ல நிலையில் உள்ள ஆம்புலன்ஸை திரும்பி கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.
நன்றி: தினகரன்

Tirumangalam town's 108 spare ambulance is in very worst condition. Need to change asap

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top