website loader
×

மதுக்கடைகளை மூட சட்டக்கல்லுாரி மாணவி போராட்டம்

திருமங்கலம்: திருமங்கலத்திலுள்ள டாஸ்மாக் கடை முன், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, சட்டக்கல்லுாரி மாணவி நந்தினி, தந்தை ஆனந்தனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது டாஸ்மாக் கடைகளின் எதிரே குடிக்க வரும் குடிமகன்களை சந்தித்து மதுவினால் ஏற்படும் பாதிப்பை எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தினை துவக்கியுள்ளார். நேற்று திருமங்கலம் நகரிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மாணவி நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறிய பேனர்களை கைகளில் ஏந்தி மதுகுடிக்க வருவோரிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்தனர்.

இதுகுறித்து மாணவி நந்தினி கூறுகையில், மதுக்கடைகளை திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களை நாசம் படுத்தும் தமிழக அரசை கண்டித்து சாபம் விடும் போராட்டம் சென்னையில் விரைவில் நடத்த உள்ளேன். அதற்கு முன்னோட்டமாக டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மது அருந்த வருவோரிடம் மதுவினால் ஏற்படும் சீர்குலைவுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் தெரிவித்து வருகிறேன் என்றார்.திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், தேவர் சிலை, வெளியூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரிலுள்ள டாஸ்மாக் கடைகளின் முன் நந்தினி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Law college student Nandhini and her Father protesting against TASMAC in Tirumangalam Yesterday

படம் & செய்தி: தினமலர் & தினகரன்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top