website loader
×

திருமங்கலம் அமைச்சர் தொகுதியானதால் இனி தேவைகள் நிறைவேறுமா?

திருமங்கலம் : திருமங்கலம் அமைச்சர் தொகுதியானதால் அடிப்படைத் தேவைகள் நிறைவேறுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் திருமங்கலம் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் நிறுத்தப்பட்டு ஏறத்தாழ 23000 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் தமிழக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவி ஏற்றவுடன் அவரது முதல் செயலாக திருமங்கலத்திற்கு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் கோரிக்கையே ஆகும்.

மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளில் பலர் மாட்டுத்தாவணி சென்று பஸ் ஏறுவதற்கு பதிலாக திருமங்கலம் வந்து பஸ் மாறுகின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம், பழங்காநத்தத்திற்கு தெற்கு பகுதியில் இருப்போர் என தினசரி ஆயிரக்கணக்கானோர் மாட்டுத்தாவணிக்கு செல்வதை தவிர்த்து நெல்லை, நாகர்கோயில், செங்கோட்டை, பாபநாசம், விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய தென்மாவட்ட நகரங்களுக்கு செல்ல திருமங்கலம் வருகின்றனர்.

மதுரையில் துணைநகராக மாறியுள்ள திருமங்கலத்தில் தற்போது இருக்கும் பஸ் ஸ்டாண்ட் சிட்டி பஸ் ஸ்டாண்டாகவே உள்ளது. வெளியூர் பஸ்கள் டவுன் போலீஸ் ஸ்டேசன் முன்பாக நின்று செல்கின்றன. நடுரோட்டில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இன்றி வெளியூர் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. அரசு, மற்றும் தனியார் பஸ்கள் போட்டிபோட்டு ரோட்டினை மறைத்து நிற்பதால் ஸ்டேசன் முன்பு தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து பகுதியாகவும் மாறி வருகிறது.

இதனால் திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக எழுந்து வருகிறது. மறவன்குளம், ராஜபாளையம் பிரிவு, ரிங்ரோடு உள்ளிட்ட பல இடங்கள் புதுபஸ் ஸ்டாண்டிற்கு கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்டு ஏதாவது ஒரு காரணத்தினால் கைவிடப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இடம் இருந்தும் ஏதாவது ஒரு பிரச்னையால் திருமங்கலத்தில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தள்ளிபோய் கொண்டே உள்ளது.

இந்நிலையில் தற்போது திருமங்கலத்தில் வெற்றி பெற்ற உதயகுமார் அமைச்சராகி உள்ளார். இதனால் திருமங்கலம் தொகுதி அமைச்சர் தொகுதி என்ற பெயரினை எடுத்துள்ளது. அமைச்சர் தொகுதியாக வரும் பல்வேறு தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெறும் என்பதால் திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் பிரச்னைக்கு அமைச்சர் உதயகுமாரால் நிரந்ததீர்வு கிடைக்கும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருமங்கலத்தினை விட சிறிய ஊர்களான பலவற்றில் நிரந்தரமான பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல் திருமங்கலம் நகரில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் திட்டத்தினை செயல்படுத்த அமைச்சர் உதயகுமார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The Challenges for the current MLA @ Revenue minister RB Udhayakumar

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top