website loader
×

காமராஜபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து புதிய பூட்டை மாட்டிய திருடன்

திருமங்கலம் : காமராஜபுரத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திருடிவிட்டு மீண்டும் புதிய பூட்டை மாட்டிய திருடன்.

திருமங்கலம் காமராஜபுரத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்ஹிந்த்,62. திண்டுக்கல்லுக்கு மகன் வீட்டிற்கு மனைவியுடன் இருநாட்களுக்கு முன் சென்றார். நேற்றுமுன்தினம் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜெய்ஹிந்த் வந்தபிறகுதான் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு தெரியவரும். இதே பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் போஸ் மனைவி சாரதா,58. வீட்டை பூட்டிவிட்டு, நேற்றுமுன்தினம் கள்ளிக்குடி அருகே உள்ள லாலாபுரம் உறவினரின் வீட்டிற்கு சென்றார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 15 பட்டு புடவைகள், தோடு, செயின் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்த நபர்கள், புதிய பூட்டு போட்டு சென்றனர். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். திருமங்கலத்தில் அடுத்தடுத்து திருட்டு நடப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
செய்தி: தினமலர்

Robbery happened in Kamarajapuram, after robbing Thief used to put a new lock

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top