website loader
×

திருமங்கலம் எம்.எல்.ஏ @ வருவாய்த் துறை அமைச்சரின் வீட்டில் தீ

திருமங்கலம் : திருமங்கலம் எம்.எல்.ஏ @ வருவாய்த் துறை அமைச்சர் திரு. உதயகுமாரின் மதுரை வீட்டில் தீ விபத்து

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.பி. உதயகுமார் தற்போது வருவாய் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தந்தை மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அமைச்சரின் தந்தை வசிக்கும் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாகவே தீ விபத்து நடந்தது என தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை பெயர் போஸ். இவரது மனைவி பெயர் தாமரைச்செல்வி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அமைச்சர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sudden fire accident in Minister's house today afternoon in Madurai Annanagar.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top