website loader
×

திறப்பு விழாவிற்கு தயாராகுகிறது திருமங்கலம் ஓமியோபதி மருத்துவமனை

திருமங்கலம் : திறப்பு விழாவிற்கு தயாராகுகிறது திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனை கட்டிடம்

தமிழகத்தின் ஒரே ஓமியோபதி மருத்துவக் கல்லூரி நம் திருமங்கலத்தில் தான் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஓமியோபதிக்கென தனிப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இட நெருக்கடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் ஓமியோபதி பிரிவும் சேர்ந்து உள்ளதால் பொதுமக்கள், அங்கு வேலை பார்க்கும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் நீண்ட நாளாக கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட அறிவித்து திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு, முத்துராமலிங்கம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிடப் பணிகள் தற்போது நிறைவுகட்டத்தை அடைந்துள்ளது. கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், ஆபரேஷன் தியேட்டர், மகப்பேறு மையம் போன்று பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் ரூ.50 லட்சத்திற்கு வாங்கப்பட்ட உள்ளன.

கட்டிடப்பணிகள் நிறைவடைந்தவுடன் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தற்போது செயல்பட்டு வரும் ஓமியோபதி பிரிவு வெளிநோயாளிகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் என மருத்துவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க : திருமங்கலத்தில் புதிய அரசு ஓமியோபதி மருத்துவமனை - எம்.எல்.ஏ பூமி பூஜை
நன்றி: தினகரன்

Tirumangalam Government Homeopathy hospital construction works are about to finish and ready for opening ceremony

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top