website loader
×

சுங்கச்சாவடிகளின் தலைநகர் ஆகிறதா திருமங்கலம் நகர்?

திருமங்கலம் : சுங்கச்சாவடிகளின் தலைநகராகிறதா திருமங்கலம்? இராசபாளைய சாலையில் சுங்கச்சாவடி அமைப்பு

திருமங்கலம் வழியாக மதுரை - கன்னியாகுமரி (என்.எச். 7) மற்றும் திருமங்கலம் - கொல்லம் (என்.எச். 208) ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. மதுரை - கன்னியாகுமர் நெடுஞ்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி விதியைமீறி அமைக்கப்பட்டுள்ளது என்றும் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

தென்காசி, இராசபாளையம், தி. கல்லுப்பட்டி பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் 4 கிமீ தூரமே இந்த நான்கு வழிச்சாலையை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் கட்டணம் வசூலிக்க எதிர்த்து வருகின்றனர். தற்போது திருமங்கலம் பகுதியில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்யப்பட்டு பணிகளைத் துவங்கியுள்ளனர்.

திருமங்கலம் - இராசபாளைய சாலையில் செங்கப்படை பிரிவு அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதன் முதற்கட்டமாக சாலையின் இருபுறமுள்ள 300க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இங்கு சுங்கச்சாவடி அமைப்பதற்கு சுமார் ரூ.2.4 கோடி திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "தேசிய நெடுஞ்சாலயில் 10மீ.க்கு மேல் அகலம் இருந்தால் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கலாம் என்பது விதி. அதன்படி திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 8 மாதங்களில் பணிகள் நிறைவடைந்துவிடும்" என்றார். ஏற்கனவே கப்பலூர் சுங்கச்சாவடியால் படாதபாடு பட்டாயிற்று தற்பொழுது இராசபாளைய சாலையிலும். இதனால் தி.கல்லுப்பட்டி - கள்ளிக்குடி சாலை, செங்கப்படை பிரிவு சாலை, திருமங்கலம் - விமானநிலையச் சாலையும் பெரும் பாதிப்பிற்க்குள்ளாகப் போகிறது, விபத்துக்களும் அதிகரிக்கப்போகிறது.
செய்தி: தினகரன்

Highways department planned to setup a new toll plaza on Tirumangalam - Rajapalayam highway near sengappadai.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top