website loader
×

அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர் சேர்க்கை துவக்கம் - வங்கி டிடி எடுக்க சிரமம்

திருமங்கலம் : அரசு ஓமியோபதி கல்லூரி சேர்க்கை துவங்கியது - கல்லூரி அருகே வங்கிக் கிளை இல்லாததால் டிடி எடுக்க சிரமம்

தமிழகத்தின் ஒரேயொரு அரசு ஓமியோபதி கல்லூரி திருமங்கலத்தில் உள்ளது, எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்துரையாடல் முடிந்த பின் நேற்று முதல் ஓமியோபதி மற்றும் சித்தா மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருமங்கலம் ஓமியோபதி கல்லூரியில் முதலாமாண்டு 50 சீட்டிற்காக நேற்று முதல் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் படிவம் பெற ரூ.500க்கு வங்கி டிடி எடுத்து வரவேண்டும் என்று முறையாக அறிவிக்கவில்லை. இதனை அறியாத மாணவர்களும் பெற்றோர்களும் விண்ணப்பப் படிவம் பெற டிடி எடுக்காமலே நேரடியாக கல்லூரிக்கு வந்தனர். பின்னர் டிடி மூலமாக மட்டுமே கட்டினால் தான் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் பரிதவித்தனர். ஓமியோபதி கல்லூரியின் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை ஏதும் இல்லாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் கல்லூரி அமைந்துள்ளதால் வங்கிக் கிளையைத் தேடி அலைந்தது தான் பரிதாபம்.
செய்தி: தினகரன்

Tirumangalam Homeopathy college admissions open - students got tired of searching nationalised bank branch near college

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top