website loader
×

திருமங்கலம் நகராட்சியின் வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்வு

திருமங்கலம் : உள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் நகராட்சி வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டதிலுள்ள மூன்று நகராட்சிகளில் பெரியதும் பழமை வாய்ந்ததும் திருமங்கலம் நகராட்சியாகும். கடந்த தெர்தலில் இருந்த அதே 27 வார்டுகள் தற்போதும் உள்ளன. வார்டுகளின் எண்ணிக்கை உயரவில்லை. அரசாணைப்படி 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், அதற்குரிய பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சியில் இதுவரை தலைவரைப் பொருத்தவரை பொது என்ற அடிப்படையில் தான் இருந்து வந்துள்ளது. இந்தமுறை பெண் தலைவருக்கு ஒதுக்கப்படுமா என்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கடந்த உள்ளாட்சி தேர்தலைக் காட்டிலும் திருமங்கலம் நகராட்சியின் வாக்காளர் எண்ணிக்கை சுமார் ஆறாயிரம் வரை அதிகரித்துள்ளது. இதே போல் கடந்த தேர்தலில் 1400 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி இருந்தது.

அதுவும் இந்த முறை மாற்றப்பட்டு 1200 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என மாற்றப்பட்டுள்ளது. இதன்படி நகராட்சியில் கடந்த முறையைக் காட்டிலும் 11 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளன.

கடந்த முறை 39 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 27 நகர்மன்ற உறுப்பினர்களில் 13 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
செய்தி: தினகரன்

Number of Election booths are going to be increase for the up-coming Local body election in Tirumangalam

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top