website loader
×

திருமங்கலம் - உசிலை சாலையில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து

திருமங்கலம் : திருமங்கலம் - உசிலை சாலை மகளிர் காவல் நிலையம் அருகே ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து

திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து சேடப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை காளப்பன்பட்டி வழியாக செல்லும் இந்த பேருந்தை கோட்டப்பட்டியை சேர்ந்த சரவணன் ஓட்டி சென்றார். திருமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு வந்தபோது பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்தது. இதனை கண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். நகரின் மையப் பகுதியில் பேருந்து நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுனர்களும் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூறும்போது, கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் பழைய பஸ்களாகவே உள்ளன. இதனால் இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை தவிர்க்க பஸ்களை நன்கு பராமரித்து இயக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அதனை மாற்றி விட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர்.
செய்தி: மாலைமலர்

Tamil Nadu Government Bus catches fire near Tirumangalam Women Police Station

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top