website loader
×

திருமங்கலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் படைத்த உலக சாதனை

திருமங்கலம் : உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்த திருமங்கலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்

திருமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்த கருப்பையா மகன் இராமு (28). இவர் சென்னை பல்லாவரத்திலுள்ள இராணுவ பயிற்சி முகாமில் பணியாற்றி வருகிறார். நம்மில் பலர் கீழே உட்காந்து எழவே பிறர் உதவியை நாடும் நிலையில், சிட்டப்ஸ் எனப்படும் கைகளை தலையின் பின்பகுதியில் வைத்து படுத்து படுத்து எழும் உடற்பயிற்சியில் 4 மணி 27 நிமிடங்களில் 8125 முறை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இவரது சாதனை கோல்டன் புக் ஆப் வேல்ட் ரிகார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்டப்சில் இதற்கு முன்பு சாதனையும் இந்தியர் ஒருவரிடமே இருந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த அனுராக்ஜா இதற்கு முன் கடந்த 2012ல் 5 மணிநேரம் 3 நிமிடங்களில் 7044 முறை சிட்டப்ஸ் எடுத்த சாதனையை திருமங்கலம் ராணுவவீரர் ராமு முறியடித்துள்ளார். இதுகுறித்து ராமு கூறுகையில், ‘சிறுவயது முதலே உலக அளவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தது. 10ம் வகுப்பு வரை படித்த எனக்கு ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் ராணுவத்தில் சேர்ந்தேன்.

எனக்கு சிட்டப்ஸ் எளிதாக வரும். இதனையே சாதனையாக செய்ய நினைத்து பல்லாவரத்திலுள்ள ராணுவ முகாமில் கடந்த மார்ச் மாதம் இந்த சாதனையை செய்தேன். எனது பெற்றோர், மனைவி அளித்த ஊக்கமே சாதிக்க தூண்டியது. சிட்டப்ஸ் பயிற்சி உடற்பயிற்சியில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சி செய்தால் தொப்பை வராது. ஒரு நிமிடத்தில் 106 என்ற சாதனை ஏற்கனவே உள்ளது. அதனை முறியடிக்க தற்போது தீவிர பயிற்சியை எடுத்துள்ளேன். எனது சாதனையை ஒரு இந்தியரே முறியடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை’ என்றார்
செய்தி: தினகரன்

Tirumangalam Ramu holds the world record of most number of sit-ups in Six hours

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top