website loader
×

தரிசு என அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வாரம் 200கி சிறுதானியங்கள் ஏற்றுமதி

திருமங்கலம்: 2009ல் தமிழக அரசால் தரிசு நிலம் என அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வாரம் 200கி சிறுதானியங்கள் ஏற்றுமதி

மதுரை மாவட்டத்தில் காய்கறிகளை காட்டிலும் சிறுதானியங்களான வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, கம்பு உள்ளிட்டவை திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தரமான சிறுதானியங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறுதானியங்களை பதப்படுத்தும் ஆலை குன்னத்தூர் அருகே கடந்த ஆண்டு அரசு நிறுவியது. இங்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் சிறுதானியங்களை தரம் பிரித்து கல் நீக்கி குறைந்த கட்டணத்தில் சுத்தம் செய்து தருகின்றனர். சென்னை 'அம்மா' வாரச்சந்தைக்கு தரமான சிறுதானியங்கள் வாரம்தோறும் தலா ஒரு கிலோ பாக்கெட் வீதம் 200 கிலோ வரை அனுப்ப வேளாண் துறை 30 விவசாயிகள் மற்றும் சிவரக்கோட்டை மலை ஊரணி சிறு,குறு விவசாயிகள் சங்கத்தை தேர்வு செய்துள்ளது. தேவைக்கு ஏற்ப சென்னை உள்ளிட்ட அடுத்தடுத்து அமைய உள்ள 'அம்மா' வாரச்சந்தைகளுக்கு சிறுதானியங்களை அனுப்ப வேளாண் துறை தயாராக உள்ளது. இதே சிவரக்கோட்டையில் சிப்காட் நிறுவ கடந்த 2009ம் ஆண்டு தரிசு நிலம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தின் விளிம்பில் திருமங்கலத்தின் சிறுதானியக் களஞ்சியம்
செய்தி: தினமலர்

Millets from Tirumangalam is ready to export 200KG per week for Chennai Amma weekly Market

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top