website loader
×

தாலுகா அலுவலகத்தை அருங்காட்சியமாக மாற்ற கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை அருங்காட்சியமாக மாற்றிட மதுரை ஆட்சியருக்கு திருமங்கலம் சிட்டிசன் வெல்பேர் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது.

திருமங்கலம் மதுரை சாலையில் முனிசீப் கோர்ட் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் அருகில் திருமங்கலம் தாலுகாவின் தலைமை அலுவலகம் கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. கடந்த ஒரு நூற்றாண்டிற்கு முன் இதே கட்டிடத்தில் தான் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. மதுரை தெற்கு பகுதிகளின் வழக்குகள் அனைத்திற்கும் இங்கு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுபோல சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்கு தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கயத்தாற்றில் தூக்கிலடப்பட்டார். அவரை தூக்கிலடப்பட்ட கயிறும் இங்குள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. நூற்றாண்டு கண்ட அலுவலகமாதலால் புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசால் திட்டமிட்டு முடிக்கப்பட்டது. ஜூன் மாதம் 3ம் நாள், தமிழக முதல்வர் ஜெயலிதா காணொளிக் காட்சி மூலம் தொடங்கியும் வைத்தார். பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையில் கட்டபொம்மனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பழைய தாலுகா அலுவலகத்தை சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியமாக மாற்ற திருமங்கலம் சிட்டிசன் வெல்பேர் அசொசியசன் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை விரைவில் பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
Tirumangalam Citizen Welfare Association petitioned Madurai Collector to make old Tirumangalam Taluk office (where freedom fighter Kattabomman sentenced to death) to Freedom fighters Museum.

படம் & தகவல்: தினகரன் நாளிதழ்.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top