website loader
×

கப்பலூர் சுங்கச்சாவடிக்கு ரூ.10 கோடி அபராதம் ஊழியர்கள் வேலையிழப்பு

திருமங்கலம்: நிலுவைத் தொகை கட்டாததால் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு அபராதம் - ஊழியர்கள் வேலையிழப்பு

மும்பையைச் சேர்ந்த ரைமா எனும் நிறுவனம் கப்பலூர் சுங்கச்சாவடியை நிர்வகித்து வந்தது. இந்நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நாளும் 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் 10 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி வந்தது. இதனை கண்டித்து தேசிய நெடுஞ்சாலை துறை, சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ரூ.10 கோடி அபராதம் விதித்தது. இந்நிலையில், அந்நிறுவனம், நிர்வாகத்தை பாதியில் விட்டுவிட்டு ஆந்திராவை சேர்ந்த லைகா என்ற நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டது. இந்நிறுவனம் புதிதாக நிர்வாகத்தை நடத்த துவங்கிய பின், திருமங்கலம், கப்பலூர் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் 140 பேரை வேலைக்கு சேர்த்தனர். தேசிய நெடுஞ்சாலை துறை விதிப்படி 80 பேர்களை மட்டுமே பணியமர்த்தமுடியும். இந்நிறுவனம் தொடர்ந்து நிர்வாகத்தை கவனிக்க முடியாமல், முன்பு இருந்த ரைமா நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைத்தது. இவர்கள் ஏற்கனவே பணியில் இருந்து ஊழியர்களை நீக்கிவிட்டு, வடமாநிலத்தவர்களை வேலைக்கு சேர்த்தனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் டி.எஸ்.பி., சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதாவது: சுங்கச்சாவடி ஆரம்பிக்கபட்டது முதல் நிர்வாகத்தில் குளறுபடி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. சுங்கச்சாவடியை இங்கிருந்து அகற்றவேண்டும் என மக்கள் தொடர்ந்து எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. இவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டாமல், இழுத்தடிக்கவே இப்படி நிர்வாகத்தை மாற்றி மாற்றி எங்களிடமும், அரசிடமும் போக்கு காண்பித்து வருகின்றனர், என்றார்.
செய்தி: தினமலர்

Kappalur tollgate staffs protested against the tollgate for their dismissal yesterday

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top