website loader
×

தொழில் முனைவோரை ஊக்குவிக்க துவங்குகிறது மேட் இன் மதுரை கண்காட்சி

திருமங்கலம்: தொழில் முனைவோரை ஊக்குவிக்க துவங்குகிறது மடீட்சியாவின் மேட் இன் மதுரை கண்காட்சி

மதுரை சுற்றுவட்டாரத்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க நாளை தமுக்கம் மைதானத்தில் துவங்கவுள்ளது. கண்காட்சியை இதற்கு முன்பாக 2001, 2003 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடத்தியது மடீட்சியா. தற்போது 2016ஆம் ஆண்டு நடத்தவுள்ள இக்கண்காட்சியில் 125 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. பிளாஸ்டிக்ஸ், ஜவுளி, பொறியியல், ரப்பர், பால், மருந்து, மரச்சாமான்கள், மோட்டார் பம்ப்ஸ், உணவுப்பொருட்கள், சமையல் சார்ந்த பாத்திரங்கள், கருவிகள், மருத்துவமனை உபகரணங்கள் என பல்வேறு அரங்குகளில் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர். மேலும் தொழில் முனைவோர் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் பங்கேற்கவுள்ள இந்த கண்காட்சியில் மதுரையிலிருந்து மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்கவுள்ளனர். இக்கண்காட்சியில் தொழில் முனைவு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன. முற்றிலும் இலவச அனுமதியுடன் நடைபெறும் கண்காட்சியானது வருகின்ற செப்டம்பர் 22ஆம் நாள் தொடங்கி செப்.25 வரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Madittsia's Made in India exhibition starts tomorrow with 125 stalls

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top