website loader
×

மிகவும் மோசமான நிலையில் பேரையூர் புறவழிச் சாலை

திருமங்கலம்: மிகவும் மோசமான நிலையில் பேரையூர் பேரூராட்சிக்குட்பட்ட புறவழிச் சாலை

பேரையூர் பேரூராட்சிக்குட்பட்ட புறவழிச் சாலையில் நாளும் 500க்கும் மேற்பட்ட கனரக சுமையுந்துகளும் சரக்குந்துகளும் செல்கின்றன. மேலும் இராசபாளையம், விருதுநகர், சிவகாசி, குற்றாலம், வத்திராயிருப்பு, சதுரகிரி தாணிப்பாறை உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லும் சாலையாக இப்புறவழிச்சாலை உள்ளது. இச்சாலையில் அதிகமான தொழிற்சாலைகளுக்கு கச்சா பொருட்களை எற்றிச் செல்லும் சரக்குந்துகள் தான் அதிகம் செல்கின்றன. இதனால் இச்சாலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது.

சாலை சேதமடைந்துள்ளதால், இவ்வழியே வரும் வண்டிகள் சில நேரங்களில் பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றுவிடுகின்றன. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வண்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதுபோல் பேரையூர் பேருந்து நிலைய நுழைவாயிலில் குண்டும் குழியுமாகவும், பாதாள சாக்கடை பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை உடனே பேரூராட்சி நிர்வாகம் சரி செய்யவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.
செய்தி & படம்:

Peraiyur byepass road condition going worse and cause lot more accidents

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top