website loader
×

நிதி ஒதுக்கியும் துவங்காத கப்பலூர் சுற்றுச்சாலை விரிவாக்கப்பணிகள்

திருமங்கலம் : நிதி ஒதுக்கியும் பூமி பூஜையோடு முடங்கிய கப்பலூர் சுற்றுச்சாலை விரிவாக்கப்பணிகள்.

திருச்சி - மதுரை இடையே 135 கி.மீ., தூரம். பேருந்த்தில் பயணித்தால் அதிகபட்சம் 2 மணி நேரம். ஆனால் மாட்டுத்தாவணி - கப்பலூர் இடையே 28 கி.மீ., தூரம் குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஆகிறது. வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல இந்த சுற்றுச்சாலையை விட்டால் வேறு வழியில்லை. எனினும் சாலையில் விபத்தின்றி சென்று வருவது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

குண்டும் குழியுமாய் சுற்றுச்சாலை
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சுற்றுச்சாலை முழுவதும் குண்டும், குழியுமாக தமிழகத்தின் ஆபத்தான சாலைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. மாநகராட்சியால் சுற்றுச்சாலை பராமரிக்கப்பட்டது. இதற்காக ஐந்து இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து மாநகராட்சி கட்டணம் வசூலித்தது. எனினும் சாலை பராமரிக்கப்படவில்லை. அவ்வப்போது 'ஒட்டுப்போடும்' பணியை மட்டும் பார்த்தனர். இந்நிலையில் சாலையை பராமரிக்கும் பொறுப்பை மாநில நெடுஞ்சாலைத்துறை ஏற்றது. இதையடுத்து சுங்கச்சாவடிகளை மாநகராட்சி மூடியது.

சுற்றுச்சாலை விரிவாக்கம் செய்து தரமான சாலை அமைக்க 110 விதிகளின் கீழ் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சிறப்பு அறிவிப்பு வெளியிட்டு, 220 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இப்பணியை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த மார்ச் 1ல் சுற்றுச்சாலை விரிவாக்கப்பணிக்கான பூமி பூசையை நெடுஞ்சாலைத்துறை தடபுடலாக நடத்தியது. ஆறு மாதங்கள் கடந்த நிலையில் விரிவாக்கப்பணிகள் இன்றும் துவக்கப்படவில்லை. ஒதுக்கிய நிதி 220 கோடி ரூபாய் என்னவாயிற்று என தெரியவில்லை. வருவாய்த்துறையின் ஆமை வேகம் மாட்டுத்தாவணி - பாண்டிகோயில் இடையே நான்கு வழிச்சாலைக்கான நில கையகப் பணிகள் முடிந்துள்ளன. மதுரை - இராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து கப்பலூர் வரை நில கையகப் பணிகள் முடிக்காமல் வருவாய் துறையினர் இழுத்து வருகின்றனர். இப்பணியை விரைவாக முடித்தால் மட்டுமே சுற்றுச்சாலை விரிவாக்கம் சாத்தியம். இதற்கான கூடுதல் நில கையகப் பிரிவு அலுவலர்கள், பணியாளர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் ஏற்படும் பட்சத்தில் மோசமான சுற்றுச்சாலையில் தினமும் நடக்கும் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிர் பலிகளையும் தடுக்க இயலாது.
செய்தி: தினமலர்

Kappalur Ringroad extension project still not yet started even after TN CM allocated 220 crs for that.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top