website loader
×

பி.கே.என். பள்ளியில் விஜயதசமி அம்பு போடும் நிகழ்ச்சி

திருமங்கலம் : விஜயதசமியை முன்னிட்டு திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப் பள்ளியில் மாரியம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் கடந்த அக். 1ம் நாள் துவங்கியது. திருவிழா துவங்கிய நாள் முதல் நேற்று வரை கோயிலின் கொலு மண்டபத்தில் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். திருவிழாவின் இறுதி நாள் விஜயதசமியான இன்று மதியம் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிய மாரியம்மன் திருமங்கலம் மதுரை சாலையில் உள்ள பி.கே.என். மேல்நிலைப் பள்ளிக்கு மாலை வந்தடைந்தார். பின்னர் மாலை பள்ளியில் உள்ள வன்னி மரத்தடியில் மூன்று முறை சுற்றி வந்து அம்பு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாய் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Vijayadhasami ambu podum festival celebrated in Thirumangalam PKN Boys higher secondary school

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top