website loader
×

இட நெறுக்கடியால் சிக்கித் தவிக்கும் திருமங்கலம் பேருந்து நிலையம்

திருமங்கலம் : இட நெறுக்கடியால் இரு சக்கர வாகன நிறுத்தமாக மாறி வரும் திருமங்கலம் பேருந்து நிலையம்.

மதுரை மாவட்டத்தின் பெரிய நகராட்சியான திருமங்கலத்தில் நகர பேருந்து நிலையம் கடும் இடநெருக்கடியில் இயங்கி வருகிறது. 1 நிமிடத்திற்கு நான்கு பேருந்துகள் வந்து செல்லும் இந்நிலையத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகள் நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கண்காணிப்புக் கூண்டு இருக்கும் பகுதியைச் சுற்றியும் தற்போது ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு தற்காலிக வாகன நிறுத்தமாக மாறியுள்ளது. இவ்விடத்தில் தான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து மாநகரப் பேருந்துகளும் புறப்பட்டு செல்லும். இதனால் மிகவும் பரபரப்பாக இயங்கும் இவ்விடத்தினை இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பேருந்துகள் வந்து திரும்பிச் செல்வதற்குள் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அவசர அவசரமாக பேருந்தில் ஏற முயலும் பயணிகளும் நிற்க இடமின்றி தவிக்கும் நிலை உண்டாகியுள்ளது. இது தவிர நகரப் பேருந்துகள் அனைத்தும் அதற்குறிய இடத்தில் நிறுத்தப்படாததால் அதனையொட்டியுள்ள நடைமேடை பகுதிகள் அனைத்தும் கடைகளாக மாறியுள்ளன.

இந்த ஆக்கிரமிப்புகளால் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடைமேடை மேற்கூரையின் கீழே நிற்க இடம் இன்றி வெட்டவெளி பகுதியில் நிற்கவேண்டியுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தென்மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு அதிகளவில் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க வருகின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் திருமங்கலத்தில் இறங்கி மதுரைக்கு நகரப் பேருந்துகளில் செல்வதால் காலை முதல் இரவு வரை பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இந்தநிலையில் பஸ்ஸ்டாண்டில் டூவீலர் மற்றும் ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே 2012ல் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் பேருந்து நிலையத்தின் உரிமத்தை இரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினகரன்

Tirumangalam Bus stand filled with enroachments and two wheelers
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top